வியாபாரத்தைத் தொடங்கும் பலர் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி சரியாக சிந்திக்காமல், அதில் ஆழமாக ஈடுபட்டுவிடுவார்கள். பிறகு "எனக்கு வியாபாரத்தில் தாங்கமுடியாத அளவுக்கு நஷ்டம். லாபத்தையே பார்க்கமுடியவில்லை' என்று புலம்புகிறார் கள். அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் தனத்துக்கு அதிபதியான குரு பகவான் பலவீனமாகவோ அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருப்பார். அவர்கள் எந்த வியாபாரத்தை ஆரம்பித்தாலும் நீண்ட நாட்கள் நடத்தமுடியாது.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியனுடன் 4-ல் இருந்து, சனி பகவான் 7-ல் இருந்தால், சனியின் 10-ஆவது பார்வை சூரியனுக்கு இருக்கும். அவர் பலரை வைத்து வர்த்தகத்தைச் செய்வார்.

ஆனால், நல்லநிலையில் இருக்கும்போது அவரைப் பலரும் ஏமாற்றிவிடுவர். அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்படும். கடனாளியாகி விடுவார்.

pp

Advertisment

லக்னத்தில் செவ்வாய் இருந்து, 7-ல் சனி, 8-ல் ராகு இருக்கும் ஜாதகர் எப்போதும் பிறரைக் குறைகூறிக்கொண்டே இருப்பார். தான் எப்படி முன்னேறுவது என்பதைப் பற்றி சிந்திக்காமலே இருப்பார். பிறருடன் எப்போதும் சண்டை போடுவார். பணியாட்களைத் திட்டுவார். அவருக்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் லாபம் கிடைக்காது. எப்போதும் நஷ்டத்தையே அடைவார்.

ஜாதகத்தில் 12-ல் சனி, செவ்வாய் இருந்து, லக்னாதிபதி நீசமடைந்தால், அவர் தன் 36 வயதுவரையில் எந்தத் தொழிலைச் செய்தாலும் நஷ்டத்தையே காண்பார். சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு, இருப்பதையும் இழந்துவிடுவர்.

ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 7-ல் செவ்வாய், 8-ல் ராகு இருந்தால், அவர் எந்தத் தொழிலைச் செய்தாலும், அதைப் பிறர் முடிப்பார்களென நினைத்துக்கொண்டிருப்பார். அவர் வெறுமனே உட்கார்ந்துகொண்டிருப்பார். வர்த்தகத்தின் நுணுக்கங்கள் அவருக்குத் தெரியாது. அவர் தன் தொழிலில் பெரும்பாலும் நஷ்டத்தையே காண்பார்.

கன்னி லக்னமாக இருந்து, அதில் குரு இருந்து, சூரியன், சுக்கிரன் 6, 11-ல் இருக்கும் ஜாதகர் பேசியே வியாபாரத்தைச் செய்துவிடலாமென நினைப்பார். ஆனால், நடைமுறை விஷயங்கள் அவருக்குத் தெரியாமலிருக்கும். அதனால், தொழிலில் நஷ்டத்தையே காண்பார்.

ஜாதகத்தில் 12-ல் சூரியன், செவ்வாய், லக்னத் தில் புதன், சுக்கிரன், 2-ல் ராகு இருந்தால், அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் மது, மாது பழக்கங் களுமிருக்கும். அவர் தன் பூர்வீக சொத்தை அழித்துவிடுவார். தொழிலில் நஷ்டத்தையே சந்திப்பார்.

லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, சந்திரன் நீசமாக இருந்து, 7, 8-ல் பாவகிரகங்கள் இருக்கும் ஜாதகர் எந்தத் தொழிலைச் செய்தாலும் நஷ்டத்தையே சந்திப்பார்.

ஒருவர் வாழும் வீட்டின் பிரதான வாசல் நீசமாக இருந்து, படுக்கையறை வடமேற்கு திசையிலிருந்து, மேற்கில் தலைவைத்துப் படுத்தால், அவர் எதைச் செய்தாலும் நஷ்டம் உண்டாகும்.

வீட்டின் தெற்கு திசை காலியாக இருந்து, அவ்வீட்டின் வடகிழக்கில் கழிப்பறை, குளியலறை இருந்தால், அவர் செய்யும் வியாபாரம், தொழிலில் நஷ்டத்தைக் காண்பார்.

வீட்டின் வடகிழக்கில் துணிதுவைத்தால் அல்லது குப்பைகளைத் தேக்கிவைத் தால், அங்கு வசிப்பவர் எந்தத் தொழிலைச் செய்தாலும் நஷ்டம் உண்டாகும்.

பரிகாரங்கள்

வர்த்தகம் அல்லது தொழில் லாபத்துடன் நடப்பதற்கு...

தினமும் காலையில் குளித்து முடித்து, அரசமரத்திற்கு நீரூற்றவேண்டும்.

தினமும் இரவில் படுக்கும்போது "ஓம் ஹ்ரிம்' எனும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

வியாழக்கிழமை சிவபெருமானுக்கு கரும்புச் சாறு அல்லது தேனாபிஷேகம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்துக்குச் சென்று ஒரு தீபமேற்றவேண்டும். சிவப்பு மலரை வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்தபிறகு, பைரவர் ஆலயத்துக்குச் சென்று ஒரு தீபமேற்றவேண்டும்.

கருப்பு நிற ஆடையணியக் கூடாது வீட்டில் பழைய செருப்பு, பழைய துணிகள் இருக்கக் கூடாது. வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்கக்கூடாது. வடகிழக்கைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

தன் லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

செல்: 98401 11534